முதல் த.வெ.க அரசின் பட்ஜெட் - கல்வித்துறைக்கு முன்னுரிமை
சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கு வரலாறு
முதல் தவெக அரசின் பட்ஜெட் - கல்வித்துறைக்கு முன்னுரிமை


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார்.

சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கு வரலாறு காணாத அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள 3,734 அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மட்டும் ரூபாய் 2,132 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார்.

இதன் மூலம் பழுதடைந்த வகுப்பறைகள் சீரமைக்கப்படும், புதிய ஆய்வக வசதிகள், நூலகங்கள், கழிப்பறை வசதிகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தற்போதைய காலத்திற்கு ஏற்ப பள்ளி பாடத்திட்டத்தை சீரமைத்து, மாணவர்களின் திறன் சார்ந்த கல்வியை ஊக்குவிக்க ரூபாய் 25 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த, அனைத்து பள்ளிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளை உருவாக்க ரூபாய் 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்வியுடன் ஒழுக்கத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b