Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் கடன் தொல்லையில் இருக்கிறார்கள். சூப்பர் எல்நினோ தாக்கத்தின் காரணமாக தண்ணீர் பிரச்சனை இது போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். இதை போக்க வேண்டும் என்றால் விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
படிப்படியாக பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும், இது போன்ற எதிர்பார்ப்புகள் இருக்கிறது.
பெண்கள் குறித்து இழிவாக பேசுகின்ற ஆண்களுக்கு ஆண்மை கிடையாது. தன்னம்பிக்கையும் கிடையாது. அப்படி இல்லாததால்தான் பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார்கள்.
இந்த கேள்வியில் அனைத்து பதிலும் அடங்கியுள்ளது என்று பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN