Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
2026-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு கிடைத்த காவேரி நீரின் அளவு, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டு, திமுக ஐடி விங் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தமிழக அரசை விமர்சித்துள்ளது.
அந்தப் பதிவில்,
தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் கிடைக்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட 31.24 டிஎம்சி நீருக்கு பதிலாக, பிலிகுண்டுலு வழியாக வெறும் 0.698 டிஎம்சி நீர் மட்டுமே வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், அந்த மாதத்திற்கான மொத்த நீர்வரத்து ஆயிரம் மில்லியன் கன அடியைக் கூட எட்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரலாற்று ரீதியாக காவேரி நீர்வரத்து குறைவாக இருந்த ஆண்டுகளில்கூட, ஜூலை மாதத்தில் கிடைத்த நீரின் அளவு, 2026-ம் ஆண்டு பதிவான 0.698 டிஎம்சி அளவை விட அதிகமாக இருந்ததாகவும், இந்த நிலை தமிழக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காவேரி நீர் உரிமையை உறுதி செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கர்நாடக அரசிடம் உரிய நீரைப் பெற்றுத்தர அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் திமுக ஐடி விங் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ