Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச)
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகையும் அதிமுக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவின் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில்,
உதயநிதி அங்கிளுக்கு மட்டும் அல்ல, விஜய் அங்கிளுக்கும் நியாயம் இருந்தால் ஆதரவு கொடுப்பேன். எந்த மனிதராக இருந்தாலும் என் நிலைப்பாடு ஒன்றுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரட்டை அர்த்தத்தில் பேசுவது மட்டுமே சட்டப்படி குற்றம் என்று கூற முடியாது. ஒருவர் எந்த அர்த்தத்தில் பேசினார் என்பதை உறுதியாக நிரூபிப்பது எளிதல்ல. என்னைப் பொறுத்தவரை, 'கண்கள் இருந்தால்தான் கண்ணீர் வரும்' என்ற பொருளில்தான் அந்தப் பேச்சைப் புரிந்துகொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேறு கோணத்தில் விளக்கப்பட்டதால், குறிப்பாக சிறியவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தவறான புரிதல் உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தாலும், அப்போது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது விஜயை கைது செய்யும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடனும், அர்த்தமற்றதாகவும் தோன்றுகிறது. சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியான சூழ்நிலைகளில் அனைவருக்கும் ஒரே அளவுகோலே பயன்படுத்தப்பட வேண்டும் என்று காயத்ரி ரகுராம் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் தங்களது கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ