Enter your Email Address to subscribe to our newsletters

கோவா, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவா மாநில சட்டப்பேரவையில் பழங்குடியின
(Scheduled Tribes - ST) மக்களுக்கு அரசியல் இடஒதுக்கீட்டை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவையில் தற்போது பழங்குடியின மக்களுக்கு அரசியல் இடஒதுக்கீடு இல்லை.
இருப்பினும், மாநிலத்தில் பழங்குடியின சமூகத்தினரின் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாலும், அவர்களுக்கு சட்டப்பேரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசியல் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் பிரமோத் சாவந்த், அமித் ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தொகுதிகளின் மறுவரையறை (Delimitation), அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகள் உள்ளிட்ட அம்சங்கள் முக்கிய பங்காற்றும் எனக் கருதப்படுகிறது.
மத்திய அரசு இதுதொடர்பாக எடுக்கும் முடிவு, கோவா மாநில அரசியலில் பழங்குடியின மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் முக்கிய முன்னேற்றமாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P