Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 05 ஆகஸ்ட் (ஹி.ச)
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் இன்று காலை எதிரெதிரே வந்த இரண்டு அரசு பேருந்துகள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒன்றோடொன்று பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த கோர விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த சுமார் 30 பயணிகள் படுகாயமடைந்தனர். பேருந்துகளின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b