குதிரை பேர வழக்கில் காவல் நிலையத்தில் கையெழுத்திடும் நிபந்தனை தளர்வு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) குதிரை பேரம் தொடர்பான வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையை முழுமையாக தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி செந்தில் பாலாஜி மற்றும் அவரத
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

குதிரை பேரம் தொடர்பான வழக்கில் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையை முழுமையாக தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டிய நிபந்தனையை முழுமையாக நீக்கி உத்தரவிட்டது.

மேலும், விசாரணைக்குத் தேவைப்பட்டால் காவல்துறை சம்மன் அனுப்பி அழைக்கலாம் என்றும், அப்போது மனுதாரர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam