கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றிற்கு தொடர்ந்து வினாடிக்கு 27,000 கனஅடி நீர் திறப்பு
கிருஷ்ணகிரி, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) கர்நாடக மாநிலத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களான கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், காவிரி ஆற்றில் தொடர்ந்து வினாடிக்கு 27,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையி
Kabini Dam


கிருஷ்ணகிரி, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

கர்நாடக மாநிலத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களான கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், காவிரி ஆற்றில் தொடர்ந்து வினாடிக்கு 27,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

கே.ஆர்.எஸ். அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி ஆகும். நேற்று 103.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 105.10 அடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும், அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று 31,122 கனஅடியாக இருந்த நிலையில், இன்று 19,275 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 1,985 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடி. தற்போது அணையின் நீர்மட்டம் 82.04 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று 27,988 கனஅடியாக இருந்த நிலையில், இன்று 22,256 கனஅடியாக குறைந்துள்ளது.

இருப்பினும், கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றிற்கு தொடர்ந்து வினாடிக்கு 27,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் நீர்வரத்து குறைந்த போதிலும், காவிரி ஆற்றின் நீரோட்டம் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவது தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN