Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை மத்திய நுண்ணறிவு பிரிவினர் மாநிலம் விட்டு மாநிலம் கடந்து கேரள மாநிலத்தில் நள்ளிரவில் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 7,000 லிட்டர் எரிசாராயம் (Spirit) நிரப்பப்பட்ட 200 கேன்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் ஒரு குற்றவாளி ஆகியோரை பிடித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் காமராஜ் அவர்களுக்கு கிடைத்த எரி சாராய கடத்தல் பற்றிய ரகசிய தகவலின் அடிப்படையில் அவரின் தலைமையிலான கோவை மத்திய நுண்ணறி பிரிவு உதவி ஆய்வாளர் சேகர், மற்றும் தலைமைக்காவலர் மதிவாணன் மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு கோவை ஆகியோருடன் கேரள மாநில கண்ணூர் Excise Department அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, கோவை மத்திய நுண்ணறிவு பிரிவினரும் கண்ணூர் எக்சைஸ் துறையினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையில், கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் பகுதிக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 7,000 லிட்டர் எரிசாராயம் (Spirit) நிரப்பப்பட்ட 200 கேன்கள், ஒரு லாரி மற்றும் குற்றவாளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர், கைது செய்யப்பட்ட குற்றவாளி, பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் மற்றும் லாரி ஆகியவை சட்ட நடவடிக்கைக்காக கேரள மாநில எக்சைஸ் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
மாநிலங்களுக்கு இடையேயான எரிசாராய கடத்தலை தடுத்து நிறுத்திய இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ