Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.
இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 11 பேர் காயமடைந்துள்ளனர். 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.8 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA