வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் முன்பதிவு -கேரள போக்குவரத்துக் கழகத்தின் புதிய திட்டம் நாளை தொடக்கம்
திருவனந்தபுரம் , 05 ஆகஸ்ட் (ஹி.ச.) கேரள மாநில போக்குவரத்துக் கழகம் (KSRTC) சார்பில் பயண சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பயணிகள் வாட்ஸ்அப் மூலம் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்
A


திருவனந்தபுரம் , 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

கேரள மாநில போக்குவரத்துக் கழகம் (KSRTC) சார்பில் பயண சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பயணிகள் வாட்ஸ்அப் மூலம் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய முறையின் மூலம், பயணிகள் வாட்ஸ்அப் வழியாகவே தங்களது பயண விவரங்களை தெரிவித்து எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இதனால் பயணிகளின் நேரம் மிச்சமாகும் என்பதுடன், டிக்கெட் முன்பதிவு நடைமுறையும் மேலும் எளிமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில போக்குவரத்துக் கழகத்தின் சேவைகளை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

புதிய வாட்ஸ்அப் டிக்கெட் முன்பதிவு வசதியை கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி. ஜான் ஆகஸ்ட் 6-ந் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, KSRTC-யின் மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை எண் 149 மற்றும் புதுப்பிக்கப்பட்ட கூரியர் சேவையும் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

பயணிகளுக்கு விரைவான, எளிதான மற்றும் நவீன சேவைகளை வழங்கும் வகையில் கேரள மாநில போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வரும் டிஜிட்டல் மாற்ற நடவடிக்கைகளில் இந்த புதிய திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA