Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானம் வாங்கும் நடைமுறையில் பெரும் மாற்றத்தை கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானம் வாங்கும் நிலையை தவிர்க்கும் வகையில், புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த புதிய செயலியின் மூலம் மது பிரியர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே தங்களுக்கு விருப்பமான மதுபான ரகத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
தேர்வு செய்த பின்னர் அதற்கான பணத்தை செயலியிலேயே ஆன்லைன் மூலம் செலுத்தினால், உடனடியாக அவர்களது செல்போனுக்கு கியூ.ஆர் கோடு ஒன்று அனுப்பப்படும்.
அந்த கியூ.ஆர் கோடை அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று காண்பித்தால் போதும், அவர்கள் முன்பதிவு செய்த மதுபான பாட்டிலை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.
இதனால் கடைகளில் கூட்ட நெரிசல் குறைவதுடன், பண பரிவர்த்தனையில் வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய நடைமுறை விரைவில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Hindusthan Samachar / vidya.b