உதயநிதியை கண்டித்து திரிஷா நற்பணி மன்றம் சார்பாக கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது
மதுரை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) தஞ்சையில் நடைபெற்ற காவேரி பிரச்சனைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தம் ஆபாச வார்த்தையை பேசியதாக அவர் மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. தொடர்ந்து தவெகவினர் அளித்த புகாரை அ
Trisha


மதுரை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

தஞ்சையில் நடைபெற்ற காவேரி பிரச்சனைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தம் ஆபாச வார்த்தையை பேசியதாக அவர் மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.

தொடர்ந்து தவெகவினர் அளித்த புகாரை அடுத்து, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பாக உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கண்டன போஸ்டரானது, பெண்களின் பெயரை பயன்படுத்தி நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை இரட்டை அர்த்தத்தில் பேசி அவன் வைத்ததை ஏற்க முடியாது எனவும், எங்கள் அன்பு அக்கா திரிஷா அவர்களை பற்றி தவறாக பேசியது எங்களால் ஏற்க முடியாது எனவும், மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும் எனவும் பெண்கள் நம் நாட்டின் கண்கள் எனவும் மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றம் தலைமையகம் சார்பாக மதுரை மாநகர் முழுவதும் வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN