வேலைக்கு சென்ற வீட்டில் நகை, பணம் திருடிய பெண் - 13 ஆண்டுகளுக்கு பிறகு கைது
மும்பை , 05 ஆகஸ்ட் (ஹி.ச.) மும்பையில் வீட்டு வேலைக்கு சென்ற வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு தலைமறைவாக இருந்த பெண்ணை, 13 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். தென் மும்பை பகுதியில் உள்ள ஒரு பங்களா வீட்டில் கடந்த 2013-ம் ஆண்டு மஞ்சுளா
A


மும்பை , 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

மும்பையில் வீட்டு வேலைக்கு சென்ற வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு தலைமறைவாக இருந்த பெண்ணை, 13 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

தென் மும்பை பகுதியில் உள்ள ஒரு பங்களா வீட்டில் கடந்த 2013-ம் ஆண்டு மஞ்சுளா சுர்வே என்ற பெண் வீட்டு வேலை செய்து வந்தார். அப்போது, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு அவர் தப்பிச்சென்றார்.

இதுகுறித்து கொலாபா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

ஆனால், போலீசாரிடம் சிக்காமல் இருக்க மஞ்சுளா சுர்வே பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தியும், அடிக்கடி தங்கும் இடங்களை மாற்றியும் தலைமறைவாக இருந்து வந்ததால், அவரை கைது செய்வதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில், 13 ஆண்டுகளாக நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது, ராய்காட் மாவட்டம் மான்காவ் தாலுகா நிஜாம்பூர்–போத்வாடி கிராமத்தில் அவர் வேறு பெயரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற கொலாபா போலீசார், பர்தா அணிந்திருந்த பெண்ணின் ஆதார் அட்டையை ஆய்வு செய்து, அவர் மஞ்சுளா சுர்வே என்பதைக் உறுதி செய்தனர்.

இதையடுத்து, மஞ்சுளா சுர்வேயை கைது செய்த போலீசார், மேலதிக விசாரணைக்காக அவரை மும்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA