'Swadeshi', 'Make in India' வெறும் விளம்பர நாடகம்' – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
தமிழ்நாடு, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், மத்திய அரசை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ''Swadeshi'', ''Make in India'' போன்ற திட்டங்கள் பிரதமர் நரேந்திர மோ
மாணிக்கம் தாகூர்


தமிழ்நாடு, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், மத்திய அரசை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

'Swadeshi', 'Make in India' போன்ற திட்டங்கள் பிரதமர் நரேந்திர மோடி அரசின் வெறும் விளம்பர நாடகங்கள் மட்டுமே என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், 2025 செப்டம்பர் 19 அன்று DGTR (Directorate General of Trade Remedies) பரிந்துரைத்தபோதிலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Heavy Cranes மீது Anti-Dumping Duty விதிக்க தேவையான Customs Notification-ஐ கடந்த 11 மாதங்களாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிடாமல் இழுத்தடிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, நாட்டின் முன்னணி ஐந்து கிரேன் உற்பத்தி நிறுவனங்கள் தொழிலை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மோடி அரசாங்கம் இந்திய உற்பத்தியாளர்களுக்காக செயல்படுகிறதா அல்லது சீன நிறுவனங்களுக்காக செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ள மாணிக்கம் தாகூர், அனைத்து துறைகளிலும் பாஜகவின் போலித்தனம் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருவதாகவும் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam