Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில்,
MGNREGS திட்டத்தை சீரழித்துவிட்டு, 'VB-G RAM G' என்ற பெயர் மாற்ற முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
வெறும் பெயரை மாற்றுவதால் திட்டம் மக்களிடையே வரவேற்பைப் பெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூலை 31 வரை 70.32 கோடி மனித வேலைநாட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன என்றும், இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 34 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு திட்டத்திற்கான 60 சதவீத நிதியை மட்டுமே வழங்கி, மீதமுள்ள 40 சதவீத நிதிச் சுமையை மாநில அரசுகள் மீது சுமத்தியதாலும், புதிய விதிமுறைகளில் உள்ள தெளிவின்மையாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
குறிப்பாக, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெயரை மாற்றினால் பெருமை சேராது; ஏழைகளின் வயிற்றில் அடித்தால் நாடு மன்னிக்காது என்று குறிப்பிட்டுள்ள மாணிக்கம் தாகூர், மழைப்பொழிவு குறைந்து கிராமப்புற ஏழை மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் சூழலில், அவர்களின் முக்கிய வாழ்வாதாரமான ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P