பழனி மட நிலப் பதிவு முறைகேடு வழக்கு- சிபிஐ விசாரணை கோரிய மனு விசாரணை ஆகஸ்ட் 12-க்கு ஒத்திவைப்பு
மதுரை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) பழனி தண்டபாணி மடத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகஸ்ட் 12-க்கு
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

பழனி தண்டபாணி மடத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகஸ்ட் 12-க்கு ஒத்திவைத்தது.

இந்த வழக்கில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், சிபிசிஐடி தாக்கல் செய்த நிலை அறிக்கையின் நகலை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அரசு தரப்பில், அறிக்கையின் நகலை வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam