ஆய்வகம் அமைத்து மெத்தம்பெட்டமைன் தயாரித்த வழக்கில் மேலும் இருவர் கைது
ராமநாதபுரம், 05 ஆகஸ்ட் (ஹி.ச.) ராமநாதபுரம் அருகே இளையான்குடியில் லேத்பட்டறையில் ரகசிய ஆய்வகம் ஒன்றை உருவாக்கி போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரித்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் இருவரை போலீ
Prison


ராமநாதபுரம், 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

ராமநாதபுரம் அருகே இளையான்குடியில் லேத்பட்டறையில் ரகசிய ஆய்வகம் ஒன்றை உருவாக்கி போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரித்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த ஜூலை 28ஆம் தேதி மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்றதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் உரிய முறையில் நடத்திய விசாரணையில் இளையான்குடியில் ஆய்வகம் ஒன்றை அமைத்து அதன் மூலமாக மெத்தம் பெட்டமைன் போதை பொருள் தயாரித்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது கடந்த ஓராண்டுக்கு மேல் அங்கு ரகசியமாக இயங்கி வந்த போதைப் பொருள் தயாரிக்கும் ஆய்வகத்தை கண்டறிந்த போலீசார் 1.5 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளையும் மூடை மூடையாக மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர் இது தொடர்பாக 10 பேரை கைது செய்திருந்தனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஷாஹின்சா மற்றும் உமாக்கா ஆகிய இருவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். போதைப் பொருள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN