ராமேஸ்வரம் திருக்கோவிலில் ஜூலை மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.1.30 கோடி வசூல் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
ராமநாதபுரம், 05 ஆகஸ்ட் (ஹி.ச.) அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினம்தோறும் பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து ரா
Undiyal


ராமநாதபுரம், 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினம்தோறும் பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து ராமநாத ஸ்வாமியை வழிபட்டுச் செல்கின்றனர்.

அவ்வாறு வந்திருந்த பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ராமநாத சுவாமி திருக்கோவில் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

ராமநாத சுவாமி திருக்கோவிலின் உப கோவில்களான நம்புநாயகி அம்மன் கோவில் பத்ரகாளியம்மன் கோவில் ராமர் தீர்த்தம் லட்சுமண தீர்த்தம் ராமர் பாதம் உள்ளிட்ட பல்வேறு உப கோவில்களில் இருந்தும் உண்டியல் காணிக்கைகள் திருக்கோவில் பணியாளர்களால் கொண்டுவரப்பட்டு கோவில் மண்டபத்தில் வைத்து திருக்கோவில் இணை ஆணையர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

அவ்வாறு பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணமும் தங்கம் 41 கிராமம் வெள்ளி 3 கிலோ 283 கிராம் உண்டியல் காணிக்கையாக வரப்பட்டுள்ளதாக திருக்கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலருமான சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN