'ரீல் அரசின் முதல் பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது' – மு.க.ஸ்டாலின் விமர்சனம்
சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) ''தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், மக்கள் பிளாஸ்ட் ஆக இருக்கும் என எதிர்பார
மு.க.ஸ்டாலின்


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

'தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

மக்கள் பிளாஸ்ட் ஆக இருக்கும் என எதிர்பார்த்த பட்ஜெட், வேஸ்ட் என்று கூறும் அளவுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பட்ஜெட் திமுக அரசின் திட்டங்களின் ரீமேக் பதிப்பாக இருப்பதாகவும், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் புதிய தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் குறித்தும் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், சொந்தமாக சிந்திக்காத, சொன்னதையும் செய்யாத, சுரத்தில்லாத பட்ஜெட்டாகவே ரீல் அரசின் முதல் பட்ஜெட் அமைந்துள்ளது என்று தனது எக்ஸ் பதிவில் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P