த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் - நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்
சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று (05.08.2026) காலை 10 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடி உள்ளது. 2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை முன்னிட்டு, தமிழக
TVK Government's First Budget


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று (05.08.2026) காலை 10 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடி உள்ளது.

2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை முன்னிட்டு, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் கூட்டத்தொடருக்கு முன்னனதாக தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 181 - 1ன் கீழ், 2026 - 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

தவெக அரசு தமிழகத்தில் ஆட்சியை பிடித்த பிறகு முதல்வர் விஜய் தலைமையில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

2026-27 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்கு வருகை தந்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b