தமிழக பட்ஜெட் 2026 - துறைவாரியான நிதி ஒதுக்கீடு விபரம்
சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் தவெக அரசின் முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பள்ளிக்கல்வித் துறைக்கு 44 ஆயிரத்து 527 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Tamil Nadu Budget 2026 – Details of Department-wise Fund Allocation


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் தவெக அரசின் முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், பள்ளிக்கல்வித் துறைக்கு 44 ஆயிரத்து 527 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறைக்கு 8 ஆயிரத்து 393 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2 ஆயிரத்து 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு17 ஆயிரத்து 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு1,051 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூகநீதித் துறைக்கு 3 ஆயிரத்து 937 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 1,485 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 9 ஆயிரத்து 818 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 23 ஆயிரத்து 357 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறைக்கு 8 ஆயிரத்து 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு 4 ஆயிரத்து 880 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 4 ஆயிரத்து 414 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 2 ஆயிரத்து 142 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறைக்கு 1,678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் மற்றும் உழவர் நலத் துறைக்கு 14 ஆயிரத்து 984 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு 398 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எரிசக்தித் துறைக்கு 15 ஆயிரத்து 828 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 8 ஆயிரத்து 852 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 29 ஆயிரத்து 863 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 21 ஆயிரத்து 524 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறைக்கு 13 ஆயிரத்து 561 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வளத் துறைக்கு 9 ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b