Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து தங்களது குடும்பங்களுடன் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் நேற்றைய தினம் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீரான நிலையில், குற்றாலம் பகுதியில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுமே சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதியானது வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதிக்கு வருகை தந்து மெல்லிய சாரல் மழையில் நனைந்தபடி அருவிகளில் தங்களது குடும்பங்களுடன் ஆனந்த குளியல் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN