எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே...புரட்சி பாடலை வெளியிட்டார் முனைவர் தொல். திருமாவளவன்!!
கள்ளக்குறிச்சி, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் எகால் கிராம இளைஞர்களின் சார்பில் புரட்சியின் தொடர்ச்சி என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... என்ற புரட்சி பாடலை தொல்.திருமாவளவன் வெளியிட்டார். இந்த பாடலுக்க
க


கள்ளக்குறிச்சி, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் எகால் கிராம இளைஞர்களின் சார்பில் புரட்சியின் தொடர்ச்சி என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... என்ற புரட்சி பாடலை தொல்.திருமாவளவன் வெளியிட்டார்.

இந்த பாடலுக்கு கவிஞர் ஏ.கே. அருள்தாஸ் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இசையமைப்பை குட்லக் ரவி மேற்கொண்டுள்ளார்.

இப்பாடலை ஸ்ரீ தனலட்சுமி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் மற்றும் ஏகே புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

மேலும், 'கலைமாமணி' பூத்துறை சித்தன் குணா பாடலைப் பாடியுள்ளார்.

ஒளிப்பதிவை அஜித் செல்வராஜ் மற்றும் சீனு முனுசாமி கவனித்துள்ளனர்.

நடன அமைப்பை தேவப்பிரியா மேற்கொண்டுள்ளார்.

புரட்சி சிந்தனைகளையும், சமூக நீதி மற்றும் எழுச்சி உணர்வையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / Durai.J