அருணாசலேசுவரர் கோயிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா - சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம்
திருவண்ணாமலை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேசுவரர் கோயிலின் ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழாவினை முன்னிட்டு விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எமு
Aadipooram


திருவண்ணாமலை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேசுவரர் கோயிலின் ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆடிப்பூரம்

பிறம்மோற்சவ விழாவினை முன்னிட்டு விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எமுந்தருள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பராசக்தி அம்மனை வழிபட்டனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி

ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாகவும் விளங்கும் எல்லாம் வல்ல ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் உடனாகிய

அண்ணாமலையார் கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா இன்று காலை 06.15 மணி அளவில் தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பத்து நாட்களுக்கு காலையும் மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

அதனைத் தொடர்ந்து ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய விழாவான பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழா பத்தாம் நாள் நடைபெறவுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN