'மக்கள் நலத் திட்டங்கள் குறித்த தெளிவான அறிவிப்புகள் இல்லாத ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்' – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக அரசின் திருத்திய பட்ஜெட், மக்களுக்கான திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் எதுவும் இல்லாத ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ
உதயநிதி


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக அரசின் திருத்திய பட்ஜெட், மக்களுக்கான திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் எதுவும் இல்லாத ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசு, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வதையே முழுநேர பணியாக செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அரசின் 100 நாள் செயல்பாடு எவ்வாறு பூஜ்ஜியம் எனக் கூறப்படுகிறதோ, அதேபோல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த திருத்திய பட்ஜெட்டும் மாபெரும் பூஜ்ஜியம் என விமர்சித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தெளிவான செயல்திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும், இதனை தனது எக்ஸ் பதிவில் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P