Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றது குறித்து பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
காங்கிரஸ் கட்சியை நீண்ட காலமாக இனத்துரோக கட்சி என்று விமர்சித்து வந்த வைகோ, தற்போது அதே கட்சியின் தலைவர்களை தனது நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருப்பது முரண்பாடானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வைகோவின் நாடாளுமன்ற உரைகளில் காங்கிரஸ் கட்சி மீதான கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த உரைகள் அடங்கிய நூலை காங்கிரஸ் மூத்த தலைவர் Rahul Gandhi வெளியிடுவது அரசியல் முரண்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ விழாவில் பங்கேற்று ஆதரவு முழக்கங்களை எழுப்பியதையும் சுட்டிக்காட்டிய வினோஜ் பி. செல்வம், இதுபோன்ற பிழைப்புவாதம் நம் எதிரிகளுக்குக் கூட அமையக் கூடாது என்று தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P