Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 05 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை, பீளமேடு டெலிகாம் காலனி பகுதியில் குடியிருப்புப் பகுதிகளுக்கு இடையே தேசியப் பறவையான மயில் ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்து உள்ளது.
அப்போது அவ்வழியாக வந்த சில தெருநாய்கள் திடீரென அந்த மயிலைத் துரத்தி உள்ளன.
நாய்களிடம் இருந்து தப்பியோடிய அந்த மயில், பீதி அடைந்து அங்கு இருந்த மின்வாரிய மின்மாற்றியின் மீது பறந்து சென்று அமர்ந்து உள்ளது.
எதிர்பாராத விதமாக அங்கு உள்ள மின் கம்பிகளில் மயில் சிக்கியதால், மின்சாரம் தாக்கித் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
அழகான தேசியப் பறவையான மயில் பரிதாபமாக இறந்து கிடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
குடியிருப்புப் பகுதிகளில் பெரு பெருகி வரும் தெருநாய்களின் தொல்லையால் இதுபோன்ற வனவிலங்குகள் மற்றும் பறவைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாகக் கூறி, நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உணவு தேடி வந்த தேசியப் பறவை மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA