Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வனத்துறையின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,
2026 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, பாபநாசம் வனச்சரகத்திற்குட்பட்ட அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலில் திருவிழா முன்னேற்பாடு, பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
1. அகஸ்தியர் அருவி பகுதிக்கு 07.08.2026 முதல் 16.08.2026 வரை பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது. எனவே, மேற்கண்ட காலகட்டத்தில் அகஸ்தியர் அருவி பொதுமக்களின் வருகைக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது.
2. ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முன்னேற்பாட்டு மற்றும் ஆயத்தப் பணிகளின் காரணமாக 07.08.2026 மற்றும் 08.08.2026 ஆகிய இரு நாட்களிலும் பாபநாசம் வனச்சோதனைச் சாவடி வழியாக பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
3. மேலும், திருவிழா நிறைவடைந்த பின்னர் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளின் காரணமாக 15.08.2026 மற்றும் 16.08.2026 ஆகிய இரு நாட்களிலும் பாபநாசம் வனச்சோதனைச் சாவடி வழியாக பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட அறிவிப்பினை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN