வேளாண் பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி, லாபகரமான விலை அறிவிப்பு இல்லாதது வேதனை அளிக்கிறது - அய்யாக்கண்ணு
திருச்சி, 06 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டமன்றத்தில் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்ப
Ayyakkannu


திருச்சி, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சட்டமன்றத்தில் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை அரசு அறிவித்தாலும் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையான மற்றும் தேர்தலின் போது முதல்வர் அறிவித்த முழு பயிர் கடன் தள்ளுபடி குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும்,

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை அறிவிக்கப்படாததும் விவசாயிகளுக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் இலவச மும்முனை மின்சாரம் கேட்டு விண்ணப்பித்து விவசாயிகள் பலர் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கூடுதல் இணைப்பு வழங்கிட அரசு ஆவன செய்ய வேண்டும், மேலும் இந்த வேளாண் பட்ஜெட் என்பது 50 சதவீதம் மகிழ்ச்சி அளிப்பதுடன் 50% ஏமாற்றம் அளிப்பதாகத்தான் உள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN