Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் த.வெ.க அரசின் முதலாவது பொது பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறைக்காக ₹14,984 கோடியும், விவசாயிகளுக்கான மின் மானியத்திற்காக ₹7,432 கோடியும் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன்களை மேம்படுத்தும் வகையில் பிரத்யேக வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 6, 2026) காலை 9:30 மணி அளவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது வேளாண் பட்ஜெட்டை, மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட்கள் மீதான விவாதங்கள் நாளை
(ஆகஸ்ட் 7) தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறும். இக்கூட்டத்தொடர் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தற்போதைய வறட்சி சூழலைக் கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட்டில் முக்கிய சலுகைகள் வெளியாகும் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
ஏற்கனவே ₹75,000 வரை கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், நில அளவை பாராமல் கூட்டுறவு கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யக் கோரிக்கை எழுந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b