விவசாயிகளுக்கு AI தொழில்நுட்ப உதவி - 'உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்' அறிமுகம் – ரூ.2 கோடி ஒதுக்கீடு
சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.) விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் வழங்கும் நோக்கில், உழவர் செயற்கை நுண்ணறிவுத் (AI) திட்டம் 2026–27ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் வினோத் பட
Vinoth


சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் வழங்கும் நோக்கில், உழவர் செயற்கை நுண்ணறிவுத் (AI) திட்டம் 2026–27ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் வினோத் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.

சரியான நேரத்தில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் தகவல், சரியான நேரத்தில் பெய்யும் மழைக்கு நிகர் என்ற நோக்கத்துடன் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திரவழி கற்றல் (Machine Learning) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சேவைகள் ஒரே தளத்தில் வழங்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ், வானிலை முன்னறிவிப்பு, மண் நலம் மற்றும் மண் வளம் குறித்த தகவல்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, பருவநிலைக்கு ஏற்ற பயிர் தேர்வு, விதைப்பு முதல் அறுவடை வரையிலான தொழில்நுட்ப ஆலோசனைகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.

மேலும், சந்தை விலை நிலவரம், குரல் வழி வேளாண் சேவைகள் (Voice-First Agriculture Services), அரசு நலத்திட்டங்கள் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட அனைத்து அறிவுசார் வேளாண் சேவைகளையும் விவசாயிகள் தங்களது கைப்பேசி மூலமாக எளிதாகப் பெறும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை 2026–27ஆம் ஆண்டில் செயல்படுத்த மாநில நிதியிலிருந்து ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் வினோத் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ