Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 77 ஆயிரத்து 394 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களில் 31 ஆயிரத்து 129 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
அன்று கோவில் உண்டியலில் ரூ.4 கோடியே 72 லட்சம் காணிக்கையாக வசூலானது. மேலும் 4 லட்சத்து 9 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 37 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர்.
தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 31 கம்பார்ட்மெண்ட்களிலும் பக்தர்கள் நிரம்பியிருந்தனர்.
பக்தர்களின் வரிசை சிலாதோரணம் வரை நீண்டிருந்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA