Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச)
சென்னையில் மின் நுகர்வோர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், சென்னை அடையார் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 6) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
வேளச்சேரியில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என சென்னை மின் பகிர்மான வட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அடையாறு கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, மின் கட்டணம், மின் தடை, மின்னழுத்த குறைபாடு, புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட மின் துறை சார்ந்த அனைத்து விதமான குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக தெரிவித்து நிவாரணம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட பகுதி மின் நுகர்வோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் மின் தடை, புதிய மின் இணைப்பு, மின் கட்டணப் பிரச்சினைகள், மீட்டர் பழுது அல்லது சேதமடைந்த மின் கம்பங்கள் போன்ற புகார்களை எழுத்துப்பூர்வமான மனுவாக இங்கு சமர்ப்பிக்கலாம் என மின் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b