Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாத முதல் நாளிலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 5) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
நேற்று காலை நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,360க்கும், சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,06,880க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் நேற்று மாலையும் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,480க்கும், சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,07,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையே, இன்று (ஆகஸ்ட் 6) தங்கம் விலை மீண்டும் உயர்ந்திருக்கிறது.
அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,750க்கும், சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,10,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனையாகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P