குஜராத்தில் அங்கீகரிக்கப்படாத அனலாக் பால் பொருட்களுக்கு இன்று முதல் தடை
குஜராத், 06 ஆகஸ்ட் (ஹி.ச) குஜராத் மாநிலத்தில் அங்கீகரிக்கப்படாத அனலாக் பன்னீர், சீஸ் மற்றும் வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இன்று முதல் அமலுக்கு
குஜராத்தில்  அங்கீகரிக்கப்படாத அனலாக் பால் பொருட்களுக்கு இன்று முதல்  தடை


குஜராத், 06 ஆகஸ்ட் (ஹி.ச)

குஜராத் மாநிலத்தில் அங்கீகரிக்கப்படாத அனலாக் பன்னீர், சீஸ் மற்றும் வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

இன்று முதல் அமலுக்கு வரும் இந்த தடை குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

மக்களின் உடல்நலத்தில் எந்தவித சமரசத்தையும் மாநில அரசு பொறுத்துக்கொள்ளாது. அனலாக் பால் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

மாநில உணவு மற்றும் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்ட மாதிரி சேகரிப்பு மற்றும் ஆய்வக பரிசோதனைகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பன்னீரை போன்ற தோற்றமளிக்கும் பொருட்கள் பாலுக்கு பதிலாக தாவர எண்ணெய்கள் மற்றும் பிற பால் அல்லாத பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இத்தகைய பொருட்கள் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாகவும், உண்மையான பால் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் உணவு பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b