Enter your Email Address to subscribe to our newsletters

ஈரான், 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் நாட்டின் மீது போரைத் தொடங்கியதில் இருந்து, உலக எரிசக்தி வர்த்தகத்திற்கு மிக முக்கியமான நீர்வழிப் பாதையான இந்த நீரிணையின் நடைமுறைக் கட்டுப்பாட்டை ஈரான் கைப்பற்றியுள்ளது.
கப்பல் போக்குவரத்துக்காக இந்த வழித்தடத்தை மீண்டும் திறக்க ஈரான் ஆர்வமாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் இதை மறுக்கும் ஈரான், நீரிணையின் எதிர்க்கரையில் உள்ள அண்டை நாடான ஓமனுடன் இணைந்து ஏற்பாடுகளை செய்யும் என்று கூறி வருகிறது.
ஓமனுடனான பேச்சுவார்த்தைகள் முன்னோக்கி நகர்ந்து வருவதாக பாகாயி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒரு புரிந்துணர்வு எட்டப்பட்டாலும் கூட, அங்கு செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் அந்த நீரிணை பாதுகாப்பானதாகிவிட்டது என்று அர்த்தமல்ல என்றும் பாகாயி கூறியுள்ளார்.
பல வாரங்களாக விவாதிக்கப்பட்டு வரும் இந்த முன்மொழியப்பட்ட ஒப்பந்தம், வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான ஜூன் 17 போர் நிறுத்தத்தை மீண்டும் உயிர்ப்பிப்பது, மோதலுக்கு முன்பு உலக எண்ணெய் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கை கையாண்ட முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பிற நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு விரைவில் அமெரிக்கா ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டக்கூடும் என்றும், இது எரிசக்தி விலைகளை நிலைப்படுத்தும் என்றும் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியதற்கு அடுத்த நாள் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
வார இறுதியில் ஈரான் மீது பெரும் ராணுவ தாக்குதல் நடத்தப்போவதாக விடுத்த மிரட்டல்களில் இருந்து பின்வாங்கிய பிறகு, சில மணி நேரங்களில் நீர்வழிப்பாதை மீண்டும் திறக்கப்படலாம் என்று திங்களன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை ஈரான் வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே மறுத்திருந்தது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஹோர்முஸ் நீரிணையில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இது அமெரிக்கா - ஈரான் மோதலில் முக்கிய பதற்ற புள்ளியாக மாறி உள்ளது.
இதற்கிடையில் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கான புதிய வழித்தடம் குறித்து ஓமனுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், அந்த வழித்தடத்தை கூட்டாக நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b