Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாட்டின் 140 கோடி மக்களின் நலன் தொடர்பான உண்மையான கேள்விகளையே எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன என்றும், அதற்கு பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
உள்துறை அமைச்சர் அவைக்கு வந்து அறிக்கை அளிக்குமாறு அவைத் தலைவரை தாங்கள் கேட்டுக்கொண்டதாகவும், அதுகுறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதே நாடாளுமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய கார்கே, அவை நடவடிக்கைகளுடன் தொடர்புடைய எந்தக் கேள்வியையும் எழுப்புவது உறுப்பினர்களின் உரிமை என்றும் குறிப்பிட்டார்.
எனினும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்கும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாக மல்லிகார்ஜுன் கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P