மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – குடிநீருக்காக 1,500 கன அடி தண்ணீர் திறப்பு
சேலம், 06 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வினாடிக்கு 18,905 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 19,119 கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்
மேட்டூர் அணை


சேலம், 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று வினாடிக்கு 18,905 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 19,119 கன அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை மற்றும் அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரே இந்த உயர்வுக்கு காரணமாக உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 75.64 அடியாக உள்ளது. அணையில் 37.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி, 93.47 டி.எம்.சி. ஆகும்.

தற்போது டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படாத நிலையில், குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரி கரையோர நகரங்கள் மற்றும் கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வெளியேற்றம் தொடர்கிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டம் மற்றும் வரத்து நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீடித்தால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam