சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்
சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச) தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் இன்று (ஆகஸ்ட் 6, 2026) காலை 9:30 மணிக்கு தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முதல
Minister Vinoth presented the agriculture budget


சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச)

தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் இன்று (ஆகஸ்ட் 6, 2026) காலை 9:30 மணிக்கு தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது தனி வேளாண் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

நேற்று மாநில நிதி அமைச்சர் வில்சன் பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, இன்று இந்த வேளாண் பட்ஜெட் முன்வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.

அண்மையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குக் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட ₹50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் பெரிய விவசாயிகளுக்கு ₹5,000 நிவாரணம் போன்ற முக்கிய அறிவிப்புகளின் தொடர்ச்சியாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, அமைச்சர் வினோத் இதன் வரைவு நகலைத் திருப்பதி கோயிலுக்குக் கொண்டு சென்று பூஜை நடத்தியது அரசியலமைப்பிற்கு எதிரானது என சிபிஐ(எம்) எம்.பி. சு. வெங்கடேசன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b