ஏசி பெட்டிகளில் பயணிக்கும் RAC பயணிகளுக்கும் கட்டாயம் போர்வை, கம்பளி - ரெயில்வே வாரியம் உத்தரவு
புதுடெல்லி , 06 ஆகஸ்ட் (ஹி.ச.) விரைவு ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் RAC (Reservation Against Cancellation) பயணிகளுக்கும் போர்வை, கம்பளி மற்றும் தலையணை உள்ளிட்ட படுக்கை உபகரணங்களை கட்டாயம் வழங்க வேண்டும் என்று ரெயில்வே வாரியம் அனைத்து ம
A


புதுடெல்லி , 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

விரைவு ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் RAC (Reservation Against Cancellation) பயணிகளுக்கும் போர்வை, கம்பளி மற்றும் தலையணை உள்ளிட்ட படுக்கை உபகரணங்களை கட்டாயம் வழங்க வேண்டும் என்று ரெயில்வே வாரியம் அனைத்து மண்டல ரெயில்வே நிர்வாகங்களுக்கும் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் RAC பயணிகளுக்கும் படுக்கை உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், பல்வேறு ரயில்களில் அது முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், போர்வை மற்றும் தலையணை வழங்க மறுப்பதாக பயணிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, அனைத்து மண்டலங்களின் பொதுமேலாளர்களும் இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ரெயில்வே வாரியம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ரெயில்வே தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி மனோகரன் கூறுகையில்,

போர்வை, கம்பளி மற்றும் தலையணை பற்றாக்குறை காரணமாக ஒப்பந்த ஊழியர்கள் RAC பயணிகளுக்கு அவற்றை வழங்க மறுத்து வந்தனர்.

முழு ஏசி கட்டணம் செலுத்தியும் உறுதிப்படுத்தப்பட்ட படுக்கை வசதி கிடைக்காமல் பயணம் செய்யும் RAC பயணிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ரெயில்வே வாரியத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது என்றார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA