Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது.
இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் இன்று காலை ஒன்று திரண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.
அப்போது செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் நோயாளிகளின் நலன் கருதி தங்களது பணிகளை பாதிக்காத வகையில் போராட்டத்தை நடத்தியதாக செவிலியர்கள் தெரிவித்தனர்.
தங்களது கோரிக்கைகள் குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
Hindusthan Samachar / vidya.b