Enter your Email Address to subscribe to our newsletters

பழனி, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
பழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் உபகரணங்களின் உதவியுடன் கோவில் வளாகம் முழுவதும் காவல்துறையினர் விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கோவிலின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை கண்டறியும் நோக்கில் முழுமையான சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P