Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் பி.ஆர். சுந்தர் கைது செய்யப்பட்டதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்ததற்காக காழ்ப்புணர்ச்சி மற்றும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் பி.ஆர். சுந்தர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்திருப்பது, த.வெ.க. அரசின் மோசமான நிர்வாக நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளார்.
அரசு இயந்திரத்தை தனிப்பட்ட பகை தீர்க்க பயன்படுத்துவது வெளிப்படையான அதிகார முறைகேடு என்றும், அரசையோ அரசியல் இயக்கத்தையோ விமர்சிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை கருத்துரிமை என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
அந்த அடிப்படை உரிமையை மறுக்கும் வகையில், அதிகாரத்தை பயன்படுத்தி வழக்குகள் பதிவு செய்து அச்சுறுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
பி.ஆர். சுந்தர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற்று, அவரை விடுவிக்க வேண்டும் என்றும், த.வெ.க. அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P