Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
சட்டப்பேரவையில் வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தவெக அரசின் முதல் வேளான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மண்வளப் பாதுகாப்பு, இல்லத்தரசி வீட்டுத்தோட்டம், வேளான் இயந்திரங்களுக்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
2 மணி நேரம் 7 நிமிடங்கள் வரை அமைச்சர் வினோத்தின் வேளாண் பட்ஜெட் உரையாற்றினார்.
இதனையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் நாளை காலை 9 மணிக்கு கூடும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்து இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் வேளாண் பட்ஜெட் குறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில்,
தவெக தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு குறைந்தபட்ச நெல் கொள்முதல் விலை ரூ.3500 மற்றும் கரும்பு கொள்முதல் விலை ரூ.4500 என்றும், #உழவன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.10000 என்றும்,
#விவசாயிகளுக்கு முழுக்கடன் தள்ளுபடி என்றும் அறிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசின் வேளாண் அமைச்சர்,
வேளாண் பட்ஜேட்டோடு திருப்பதி சென்று, திருப்பதியில் தான் போட வேண்டிய மொட்டையை தமிழக வேளாண் பட்ஜெட் மூலம் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளுக்கும் மொட்டை அடித்து துரோகம் செய்திருப்பது நியாயமா CM sir? என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN