Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது,
இன்று வாசித்தது செயல் வடிவமாக வரவேண்டும் அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என பேசிய அவர், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எந்த அறிவிப்பும் இவர்கள் அளிக்கவில்லை.
நெல் கிடங்குகள் பற்றிய அறிவிப்புகள் வரவில்லை இதற்கான அறிவிப்பு இல்லாததை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.
கருவேல மரங்களை அகற்றி நிலம் இல்லாத விவசாயிகளுக்கு அதனை குத்தகைக்கு வழங்கலாம் இது போன்ற திட்டத்தை அவர்கள் அறிவிக்கவில்லை.
பல ஆண்டுகளாக அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டுமே செய்துள்ளார்கள்.
மாற்றத்தை கொண்டு வருவோம் என்று சொன்ன இந்த ஆட்சி எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை, விவசாயிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் எந்த ஒரு அறிவிப்பும் இதில் இடம் பெறவில்லை ஏற்கனவே பல ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீண்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை வித்தியாசமும் இல்லை.
மேலும் இன்று அவர்கள் செய்தித்தாள்களை வாசிப்பது போல வாசித்திருக்கிறார்கள் இதனை நாம் சொல்லத்தான் நினைத்துக் கொள்ள வேண்டும்
முதலமைச்சர் அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்க வேண்டும் என்று கூறுகிறார் ஆனால் தற்போது அவர்தான் முதலமைச்சர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இதனை ஏன் அவர் செய்ய மறுக்கிறார் என பிரேமலதா கேள்வி எழுப்பினார்.
Hindusthan Samachar / ANANDHAN