திருத்திய நிதிநிலை அறிக்கைக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு
சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் மக்கள் நலனையும் மையமாகக் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையையும், வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்த நிதி, திட்டம் மற்றும்
விஜய் - மரிய வில்சன்


சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் மக்கள் நலனையும் மையமாகக் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையையும், வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்த நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர்

நெ. மரிய வில்சன் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் ஆகியோருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திருத்திய நிதிநிலை அறிக்கை மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியுடன், கால்நடை, மீன்வளம், பால்வளம், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டல் உள்ளிட்ட துறைகளையும் மேம்படுத்தி, அனைத்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இறுதியாக, வளமான தமிழ்நாட்டை நோக்கிய வெற்றிப் பயணம் தொடரட்டும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P