Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக விவசாயிகளுக்கு தரமான நெல் விதைகள் உரிய பருவத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விநியோக மானியத்திற்கான சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தரமான விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான மானியத்தை ஒன்றிய அரசு 2026–2027ஆம் ஆண்டு முதல் நிறுத்தியுள்ளது. இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாநில நிதியில் இருந்து புதிய மானியத் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, விதைப்பண்ணைகள் அமைத்து 7,730 மெட்ரிக் டன் சான்று நெல் விதைகளை உற்பத்தி செய்து தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமைக்கு வழங்கும் விவசாயிகளுக்கு நெல் விதை உற்பத்தி மானியம் வழங்கப்படும்.
மேலும், 14,570 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட நெல் விதைகளை விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்க நெல் விதை விநியோக மானியம் வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த 2026–2027ஆம் ஆண்டில் மாநில நிதியில் இருந்து ரூ.34.72 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்
மூலம் தரமான நெல் விதைகள் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதுடன், நெல் உற்பத்தி மற்றும் விளைச்சல் அதிகரிக்கவும், விவசாயிகளின் செலவினச் சுமை குறையவும் வழிவகுக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ