வறண்டு கிடந்த மூல வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து - விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி, 06 ஆகஸ்ட் (ஹி.ச.) வைகை ஆற்றின் பிறப்பிடமான மூல வைகை ஆற்றில் கடந்த நான்கு மாதங்களாக நீர்வரத்து இன்றி வறண்டு கிடந்த நிலையில், தற்போது மீண்டும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. வருசநாடு வனப்பகுதிக்கு உட்பட்ட ஓயம்பாறை, வாலிபாறை உள்ளிட்ட மலைப்பக
வறண்டு கிடந்த மூல வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து - விவசாயிகள் மகிழ்ச்சி


தேனி, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)

வைகை ஆற்றின் பிறப்பிடமான மூல வைகை ஆற்றில் கடந்த நான்கு மாதங்களாக நீர்வரத்து இன்றி வறண்டு கிடந்த நிலையில், தற்போது மீண்டும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது.

வருசநாடு வனப்பகுதிக்கு உட்பட்ட ஓயம்பாறை, வாலிபாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மூல வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்த ஆறு தான் பின்னர் வைகை அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

கடந்த நான்கு மாதங்களாக கோடை வெயில் மற்றும் மழை பற்றாக்குறை காரணமாக ஆறு முற்றிலும் வறண்டு, பாறைகள் மட்டுமே தெரியும் நிலை இருந்தது. இதனால் ஆற்றை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலையில் இருந்தனர்.

தற்போது ஆற்றில் சலசலவென தண்ணீர் ஓடத் தொடங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நீர்வரத்து தொடர்ந்தால் வைகை அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b