Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள கபினி அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் எதிரொலியாக தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 18,905 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 19,119 கன அடியாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 19 ஆயிரம் கன அடியை தாண்டி நீர்வரத்து பதிவாகி உள்ளது.
காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயருவது, இப்பகுதி விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே நிலை நீடித்தால் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் தடையின்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் காவிரி ஆற்றில் வந்து கலந்து மேட்டூர் அணையை வந்தடைகிறது.
தொடர்ந்து நீர் திறப்பு அதிகரிக்கப்படுவதால் வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b